GuidePedia

அமெரிக்கா- கியூபா நாடுகளுக்கிடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்க அமெரிக்கா உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
50 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 1960 ஆம் ஆண்டு கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட கப்பல் போக்குவரத்தையும் அமெரிக்கா தடை செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கியூபா- புளோரிடாவிற்கிடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை மிக மகிழ்ச்சியான விடயம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அத்துடன் கியூபா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை கடந்த டிசெம்பர் மாதமளவில் நீக்கிய அமெரிக்கா தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இதற்காக கியூப நாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டங்களை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாக வொஸிங்டன் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவடைந்ததும் வருகின்ற செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கியூபா- அமெரிக்காவிற்கிடையிலான கப்பல் போக்குவரத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைவடைவதற்கான சந்தர்ப்பம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top