GuidePedia

பொதுத் தேர்தலை நடத்த 300 கோடி ரூபா பணம் தேவைப்படுவதாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குமாறு தேர்தல் திணைக்களம் திறைசேரியிடம் கோரியுள்ளது.
அரசாங்கம் அவசரமாக தேர்தலை நடத்தினால் சுமார் 300 கோடி ரூபா பணம் தேர்தல் செலவுகளுக்கு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுத் தேர்தலை நடாத்த தயார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்யப்பட்ட மொத்த செலவு விபரங்கள் எதிர்வரும் 15ம் திகதி அளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.



 
Top