புதிய கண்டி வீதி, மீஹாவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு தேசிய கல்வி பீடத்தை சேர்ந்த மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பியகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
