இலங்கையர் 23 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர்களில் 17 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வீட்டுப் பணிப் பெண்கள் போன்ற தொழில்களையே செய்து வருகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எமது நாட்டுக்குப் புகழையும் கெளரவத்தையும் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்நிலையை மாற்றி சிறந்த உயர் தொழில்களில் ஈடுபடும் வகையில் எம்மவர்களுக்குப் பயிற்சி வழங்கி வெளிநாட்டுத் தொழில்களுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தாதியர் பயிற்சிக் கல்லூரியை தாதியர் பயிற்சி பல்கலைக்கழகமாக உயர்த்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட் டுள்ளதுடன் தமது ஆட்சிக் காலத்திலேயே இதனை நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்குத் தேவையான தொழில்நுட்பம், வளங்கள் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
சுகாதாரத்துறையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. அவற்றின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை கவனத்திற் கொள்வதுடன் மறுபுறம் அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நகர் பிரதேசங்களில் உள்ள வசதிகளைப் போன்றே கிராமப் பிரதேசங்களுக்கும் வசதிகள் வளங்களைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.