GuidePedia

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, கடுவல நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை)உத்தரவிட்டுள்ளது.
அவருடன் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர.ஆர்.கே.ரணவக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் பந்துல திலகசிறி ஆகியோரும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பஷில் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய பஷில், கடந்த மாதம் 21ஆம் திகதி விசாரணையின் நிமித்தம் நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 
Top