GuidePedia

புதிய தேர்தல் முறைமையை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 20வது திருத்தம் நாளை (13) பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. 
தேர்தல் முறை திருத்தம் தொடர்பான புதிய யோசனைகள் இருப்பின் அவற்றை நாளை மதியம் 12 மணிக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்தார்.
புதிய தேர்தல் முறையொன்றை தயாரிப்பதற்கு தேவையான முக்கிய விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தேர்தல் முறை திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் தொடர்பாகவும் நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.



 
Top