GuidePedia

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இணக்கம் எட்டப்படாவிட்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்பின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய தேர்தல் முறையானது புதிய நாடாளுமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்றைய தினமும் நடைபெறவுள்ள நிலையில், இன்று இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.




 
Top