புதிய தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பிலான முன்மொழிவுகளை நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது இந்த வேண்டுகோளை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
