19ம் திருத்தச் சட்டத்துடன் நின்றுவிடப் போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது எல்லாம் சரியென்று, இத்துடன் எம்மால் பேசாமல் இருந்துவிட முடியாது.
நாம் அவ்வாறு இருக்கப் போவதுமில்லை. 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் 20ம் திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சில சந்தர்ப்பங்களில் எமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டாலும் வரலாறு அதனை திருத்தி அமைத்துள்ளது.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் கூறியதனையே உச்ச நீதிமன்றமும் அறிவித்திருந்தது.
20ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு அவசியமானது. அதனை எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்து அமுல்படுத்துவோம் என சம்பிக்க ரணவக்க ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
