GuidePedia

19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதிலும் அது நடைமுறைக்கு வர இன்னும் சில நாட்கள் செல்லும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தப்பிரேரணை கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் அந்த பிரேரணை சட்டமாஅதிபர் மற்றும் சட்டவரைஞர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இதன்பின்னரே சபாநாயகர் இந்த பிரேரணை மீது தமது கையொப்பத்தை இடுவார்.
சபாநாயகர் கையொப்பம் இட்ட பின்னரே குறித்த பிரேரணை சட்டமாக கருதப்படும். எனவே இதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களாகும் என்று விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



 
Top