GuidePedia

மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்தும் 13வது திருத்தச்சட்டம் உட­ன­டி­யாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்சி மாற்றம், அதி­காரப்பர­வ­லாக்கம் ஆகியன தமிழ் பேசும் மக்­களை பாது­காக்­காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களின் போது கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கமைய ஜனா­தி­பதியும், பிரதமரும் 13வது திருத்தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் உள்ள சிக்கல் நிலை­மைக்கு சர்­வ­தேச தலை­யீடு அவ­சியம் என வட மாகாண முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ள நிலையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆட்சி மாற்றம் மற்றும் அதி­காரப் பர­வ­லாக்கம் நடை­பெற்­றி­ருப்­பது வர­வேற்கத்தக்­கது.
எனினும் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் 19வது திருத்தம் எந்த விதத்­திலும் தொடர்­பு­டை­யதல்ல.
தமிழ் பேசும் மக்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்திலேயே ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்த்தார்கள்.
அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் 13வது திருத்தச் சட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும்.
மேலும் சிறு­பான்மை மக்கள் பாது­காக்கப்படுவதற்கான நட­வ­டிக்­கை­களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதுடன், 13வது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­க பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் தெரி­வித்­துள்­ளனர்.
அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை என அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது தற்போதைய அரசாங்கம் வட,கிழக்கு மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளையும் கவ­னத்திற் கொள்ளும் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் இன்று அர­சாங்கம் திருத்­தங்­களை முன்­வைத்து சிறிய மாற்­றங்­களை முன்­னெ­டுக்­கின்­ற­மையால் நாட்டில் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் எதிர்­பார்க்­கக்­கூ­டிய நல்ல மாற்­றங்கள் எதுவும் இடம்­பெறப்போவ­தில்லை.
தேசிய கொடியில் மற்றும் தேசிய கீதத்தில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதும் நாட்டில் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
சிறு­பான்மை மக்­களின் அடை­யா­ளங்­களை பாதுகாத்தல், தமிழ், முஸ்லிம் மக்­களின் உரி­மை­களையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல், தொடர்பிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவற்றை ஒரு சில மாற்­றங்­களால் ஏற்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மற்­றது.
அர­சியலமைப்பில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.
முழு­மை­யாக அர­சி­ய­ல­மைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
திருத்தங்கள் கொண்டு வந்து காலத்தை கடத்துவதை விடவும் அரசியலமைப்பில் முழுமையான மாற்றம் கொண்டுவந்து மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதே சிறந்த வழிமுறையாகும்.
அதை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.



 
Top