நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.
நேபாளத்தில் பேரழிவு
நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் நாட்டையே புரட்டிப்போட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.
பூகம்பம் தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகளும், பொதுமக்களின் மரண ஓலங்களுமாகவே காணப்படுகின்றன. இந்த தேசிய பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 6 ஆயிரத்து 300-ஐ கடந்திருந்தாலும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
2½ லட்சம் வீடுகள்
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 10 ஆயிரம் பேர் வரை இருக்கும் என நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா கூறியுள்ளார். எனினும் இது 15 ஆயிரமாக உயரக்கூடும் என அந்த நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இந்த கோர நிலநடுக்கத்தில் சிக்கி 14 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கு முழுவதும் இடிந்ததும், பாதி இடிந்ததுமாக 2½ லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சுமார் 10 ஆயிரத்து 400 அரசு கட்டிடங்கள் முழுவதுமாகவும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பாதியும் சேதமடைந்துள்ளன.
இரவு பகலாக மீட்புப்பணி
இவ்வாறு சேதமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியிலும், அதில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியிலும் சர்வதேச மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காட்மாண்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலேயே முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்த இவர்கள், தற்போது படிப்படியாக தொலைதூர பகுதிகளுக்கும் நகர்ந்து வருகின்றனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பேரிடர் மீட்புக்குழுவினருடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஏராளமானோர் இரவு, பகலாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனே எரிக்க உத்தரவு
பூகம்பம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், தலைநகர் காட்மாண்டுவை சுற்றியுள்ள பகுதிகளில் இடிபாடுகளுக்குள் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசி வருகிறது. இதனால் இடிபாடுகளுக்குள் யாரும் உயிரோடு உள்ளனரா? என்பதை கண்டுபிடிக்க நெருங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த துர்நாற்றத்தால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படாத வீடுகளிலும் மக்கள் வசிக்க முடியாமல், திறந்த வெளிகளிலேயே காலத்தை கடத்துகின்றனர். எனவே இந்த பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பிணங்களை உடனே எரியூட்டுமாறு மீட்புப்படையினர் உத்தரவிட்டு உள்ளனர்.
பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் இறுதிச்சடங்குகளுக்கு தலா ரூ.40 ஆயிரமும், லேசான சேதமடைந்த வீடுகளின் பராமரிப்புக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மக்கள் கோபம்
காட்மாண்டுக்கு வடகிழக்கே உள்ள சட்டாரா பகுதியில் சுமார் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்துள்ளன. இந்த பகுதியில் மீட்புப்பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்று சேரவில்லை.
குறிப்பாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றான கோர்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிறிதளவு உணவு மற்றும் பொருட்களுடன் திறந்த வெளிகளில் வசிக்கின்றனர். தங்களுக்கு போதுமான உணவு கிடைக்காததால் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் தேவை
இந்த மக்களுக்கு உணவு வினியோகிக்க போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாமல் நேபாள அரசு திண்டாடுகிறது. தற்போது 20-க்கும் மேற்பட்ட சர்வதேச ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் அதிக ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு சர்வதேச நாடுகளை நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நேபாளத்தில் சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள ஐ.நா., இதில் குறைந்தது 20 லட்சம் பேருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான கூடாரம், தண்ணீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளது.
வெளிநாட்டு நன்கொடைகள்
பூகம்பத்தால் இடிந்து விழுந்த வீடுகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்று சின்னங்களை மீண்டும் கட்டியெழுப்பி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வரை செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நேபாள அரசு அறிவித்து உள்ளது. இதற்கு சர்வதேச நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் என நேபாள நிதி மந்திரி ராம் சரண் மகத் கூறியுள்ளார்.
எனினும் தொலைதூர பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என்றும், அந்த பகுதிகளில் ஆய்வுப்பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.