(காதர் முனவ்வர்)
உழைக்கும் வர்க்கம் தன்னுடைய உரிமைக்காக முதல் முதலாக குரல் கொடுத்த தினமே முதல் மே தினம்.
அமெரிக்கா சிக்காகோ நகரில் 1886ம் ஆண்டு மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலை எனும் உரிமைக்காக குரல் கொடுத்து பல தியாகங்கள் செய்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை நிலை நாட்டிய மே முதல் நாள்.1889ம் ஆண்டிலிருந்து உலக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
எமது நாட்டின் நல்லாட்சி அரசின் முதலாவது மே தினம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் பெருமிதம் அடைகின்றேன்.
இன்று உலகில் அதிகமான அமைப்பைக்கொன்ட வர்க்கம் என்றால் அது தொழிலாலர் வர்க்கமாகதான் காணப்படும்.
அரசியல் பொருளாதார சமூக துறைகளிலும் சமத்துவம் நிலவிடும் ஒரு சமுதாய அமைப்பை நிறுவிடவும்,உலகத் தலைமை உழைப்பவர்களுக்கே எனும் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயத்தை அமைத்திடவும் உழைக்கும் வர்க்கம் பேதங்களை மறந்து ஒருங்கினைய வேண்டும்.
என உழைக்கும் வர்க்க உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் எனது மனமாந்த மே தின வாழ்த்துக்கள்.
றிஷாட் பதியுதீன்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு.