GuidePedia

இந்தோனேசியா போன்ற நாடுகளில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. அதேபோன்று இலங்கையிலும் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இங்கு விதிக்கப்படும் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாறி பின்னர் அதிலிருந்தும் விடுதலையாகி சமூகத்துடன் மீள இணையும் குற்றவாளிகள் மீளவும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போதே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்க வேண்டுமாயின் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.




 
Top