GuidePedia

புத்தளம் நகரில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் (பிபிஏஎப்) இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதன் பிரசார செயலாளர் எச்.என்.எம்.எம். சிபாக் தெரிவித்தார்.
ஜும்ஆத் தொழுகையின் பின் புத்தளம் நகரின் பிரதான வீதிகளில் நடத்தப்படும் ஊர்வலம் பெரியபள்ளிக்கு அருகில் உள்ள 1400 நினைவு கோபுரத்திற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
தொழில் உரிமைகள் மற்றும் தொழிலாளர் நலன்கள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் இம் மே தின ஊர்வலத்தை நடத்துவதாக புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் பிரசார செயலாளர் எச்.என்.எம்.எம். சிபாக் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினமாகிய மே 01 ஆம் திகதி நடைபெறும் இம் மே தின ஊர்வலம் புத்தளம் நகரில் நடத்தப்படும் முதலாவது ஊர்வலமாகக் கருதலாம் என்றும் இவ் ஊர்வலத்தில் பொது மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுக்கின்றார்.




 
Top