GuidePedia

ஜப்பானின் ஹோன்ஷு தீவையொட்டியுள்ள சுகோக்கு பகுதியில் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் மட்சுய் நகரை சகாய்மினாட்டோ நகருடன் இணைக்கின்றது.
எஷிமா ஒஹாஷி என பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம், அடியில் ஓடும் ஆற்று நீரில் கப்பல்களும் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஏகப்பட்ட வளைவுகளும், திருப்பங்களும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடம் சறுக்கு மரம் போல் மிகச்சரிவாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பாதையை கடப்பது, மெய்சிலிர்ப்பூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது.



 
Top