நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை 60 தொடக்கம் 65 சதவீதம் வரை குறைப்பதற்கு 19 வது அரசியலமைப்பு திருத்தம் உதவியதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த திருத்தத்தை தயாரித்த குழுவின் பிரதானியும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
19 வது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.