GuidePedia

தனியார்துறை ஊழியர்களின் மாதச் சம்பளம் 2500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சம்பள அதிகரிப்பை அறிமுகம் செய்ய அரசாங்கம புதிய சட்டமொன்றை கொண்டு வர உள்ளது.
தனியார்துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவீன்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த 2500 ரூபா சம்பள உயர்வானது தனியார்துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று முதல் தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்கள் 1500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மேலும் ஆயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோன்று நாள் கூலி பெற்றுக்கொள்வோருக்கு முதல் கட்டமாக சம்பளத்துடன் 60 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக 40 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளது



 
Top