GuidePedia

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் மாத்திரம் 17 மே தினக் கூட்டங்களும், 12 ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையொட்டி கொழும்பு மாநகர் உட்பட முக்கிய நகரங்களில் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் கொழும்பில் நடைபெறும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் திருகோணமலையிலும், மலையக தொழிற்சங்கங்களின் பிரதான கூட்டங்கள் பதுளை, ஹாலிஎல, தலவாக்கலை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும், ஈ.பி.டி.பியின் மேதினக் கூட்டம் பூநகரியிலும் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



 
Top