முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையுமான ரணசிங்க பிரேமதாஸவின் 22வது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கொழும்பு அளுத்கடை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரேமதாஸ சிலைக்கு அருகாமையில் இரங்கல் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது