பருத்தித்துறை அல்வாயில் உள்ள நாவலடி ஸ்ரீலங்கா பாடசாலைக்கு அண்மையில் இனந்தெரியாதோரால் இன்று வியாழக்கிழமை கிறனைட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கிரனைட் வீச்சு முன்னெடுக்கப்பட்ட பகுதிக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக எமது பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்றிருந்த மக்களை பீதியடையச் செய்வதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாடசாலைக்கு அருகில் இருக்கும் பாழடைந்த வீட்டிலேயே கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. ஆனபோதும் மக்கள், பீதியடையாமல் வாக்குகளை அளித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்த பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு எமது செய்திப்பிரிவு அழைப்பினை மேற்கொண்ட போது, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.