GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

பொலிசாரின் பாதுகாப்புடன் இடம்பெறுகின்ற இத் தேர்தல் வாக்களிப்பில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பலர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வேளை காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்திலுள்ள தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அவரின் உறவினர்களும் வாக்களித்தனர்.








 
Top