ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அதிவேக வீதிகளில் இன்றைய தினம் கட்டணம் அறவிடப்படமாட்டாதென தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – மாத்தறை மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதிகளில் இன்று மாலை 6 மணி வரை கட்டணம் அறவிடப்படமாட்டாது என, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களின் சௌகரியத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.