GuidePedia

பாரிஸில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தின் கொடுமையை 30 ஆண்டுகள் அனுபவித்த இலங்கை, அதன் கொடூரத்தை நன்கு உணர்கிறது. பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் அன்றி அது உலகின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகிறது என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது.
பயங்கரவாதம் ஒரு நாட்டை எப்படி எளிதாக பலவீனப்படுத்தும் என்பதை இந்தக் கொடூரமான தாக்குதல் நினைவூட்டுவதுடன் அரசாங்கங்கள் விழிப்புடன் இருப்பதினால் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடினமான நேரத்தில் பிரான்ஸ் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜனாதிபதி, இந்த கொடூரமான சோகத்தை சமாளிப்பதில் இலங்கை அரசினதும் மக்களினதும் முழு ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.



 
Top