(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 28.04.2015 செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது.
இந்த கல்விச் சுற்றுலா காத்தான்குடியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.
இச் சுற்றுலாவில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்காடன் மாணவ மாணவிகள் சுமார் நூறு பேர் கலந்துகொண்டதோடு பிஸ்மி கின்டர்காடன் மற்றும் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் உட்பட ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இக்கல்விச்சுற்றுலாவில் மாணவ மாணவிகள் மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சிறுவர் பூங்கா, அஞ்சல் அலுவலகம், விமான நிலையம், மங்கலராம விகாரை, கல்லடி கடற்கரை, முகத்துவாரம் கடற்கரை, முகத்துவாரம் சூழலியல் பூங்கா, காணிக்கை மாதா கோவில் ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டனர்.
அத்தோடு மாணவர்கள் சிறுவர் பூங்காவில் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டதோடு விசேடமாக படகுச்சவரியிலும் கலந்துகொண்டனர்.
மேலும் சுற்றுலாவின் விசேட அம்சமாக மாணவர்கள் புகையிரதம் மூலம் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் வரை பயணித்தமை குறிப்பிடத்தக்கது.