முஹமது நபியை தொடர்ந்தும் வரையப்போவதில்லை என்று சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ நையாண்டி பத்திரிகையின் கேலிச் சித்திர கலைஞரான ரொனால்ட் லூஸியர் குறிப்பிட்டுள்ளார்.
சார்லி ஹெப்டோ மீது கடந்த ஜனவரியில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் வெளியான பத்திரிகையின் முகப்பு பக்கத்தில் இடம்பிடித்த இறை தூதரின் கேலிச் சித்திரத்தை இவரே வரைந்திருந்தார்.
'அவர் மீது எனக்கு தொடர்ந்தும் ஈடுபாடு இல்லை" என்று லெஸ் இன்ரொகுப்டிபில்ஸ் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் லூஸியர் குறிப்பிட்டார்.
'சார்கோசியை வரைந்து ஏற்பட்டது போல், (இறை தூதரை வரைவதால்) நான் காளைப்படைந்து விட்டேன். இவர்களை தொடர்ந்து வரைந்து எனது வாழ்வை கழிக் கப்போவதில்லை" என்று கூறினார்.
பாரிஸில் இருக்கும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலு வலகத்திற்குள் முகமூடி அணிந்த இருவர் நடத்திய தாக் குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு யெமன் அல் கொய்தா பொறுப்பேற்றது.
சார்லி ஹெப்டோ அடிக்கடி இறைதூதரின் கேலிச்சித் திரத்தை வெளியிடுவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டும் இறைதூதரின் கேலிச் சித்திரத்திற்காக சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட் டிருந்தது.