GuidePedia

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று புதுடில்லியில் வைத்து தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை கடற்பரப்புள் செல்லாது போனால் தொழிலில் உரிய அறுவடையை பெறமுடியாது என்று அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாக 22 பேர் அடங்கிய தமிழக மீனவப்பிரதிநிதிகள் கூறினர்.
இந்நிலையில் கைதுசெய்யப்படும் மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை என்பது கடினமான காரியமாக மாறிவருகிறது என்றும் சுஸ்மா குறிப்பிட்டார்.
மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்புக்குள் சென்றால், இலங்கை அரசாங்கம் அவர்களை விடுவிப்பதில் தாமதத்தை காட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.



 
Top