GuidePedia

8-வது ஐ.பி.எல் சீசனில் 36-வது ஆட்டம் நேற்று மும்பை விராபவுர்னே ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ரஹானே ஆட்டமிழக்காமல் 91 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கே.கே.நாயர் 61 ரன்களை குவித்தார். வாட்சன் 21  ரன்களுடன் ஆட்டமிழக்க 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் டுமினி (56) திவாரி (28) யுவராஜ் சிங் (22) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக குல்கர்னி, பின்னி, பால்க்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.



 
Top