GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திக்க எடுத்த முயற்சி தொல்வியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

ஜோன் கெரியுடன் சந்திப்பு ஒன்றை நடாத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு மஹிந்த பல தடவைகள் தூதரக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது முதல் மஹிந்த இந்த முயற்சிகளை எடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஜோன் கெரியுடன் தமக்கு சந்திப்பு ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்து தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கத் தூதரகத்திடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த கோரிக்கை குறித்து அமெரிக்கத் தூதரகம் எவ்வித பதிலையும் அளிக்காது ஜோன் கெரியின் விஜயம் முடியும் வரையில் மௌனம் காத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது



 
Top