GuidePedia

மரக்குற்றி என எண்ணி 15 அடி நீள மலைப் பாம்பில் ஏறி நின்ற நபர்; அதன் அசைவை உணர்ந்து துள்ளிக் குதித்து ஓட்டம்.
மரக்­குற்றி என நினைத்து மலைப் பாம்பு ஒன்றின் மேலேறி புல் அறுத்துக் கொண்­டி­ருந்த நபர் மரக்­குற்றி அசை­வதை உணர்ந்த போது அது மரக்­குற்றி அல்ல. மலைப்­பாம்பு என்­பதை அறிந்து துள்ளிக் குதித்த சம்­பவம் ஒன்று பதுளை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
பது­ளை­ப­கு­தியின் மாணிக்­க­வல்லி தோட்­டத்தைச் சேர்ந்த ஒரு­வரே மலைப் பாம்­பி­ட­மி­ருந்து தப்­பி­யுள்ளார்.
இவர் தனது பசு­வுக்கு புல் அறுத்­துக்­கொண்­டி­ருந்த போது தாம் ஏற் நின்ற மரக்­குற்றி அசையத் தொடங்­கி­யது. அசை­வதை அவ­தா­னித்த போது அது மலைப் பாம்பு அறிந்து அஅ­ல­றி­படி துள்ளிக் குதித்­துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு கூடி­ய­வர்கள் வன ஜீவி­ரா­சிகள் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அறி­வித்தும் பயன் கிடைக்­கா­மை­யினால் அதனை பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் கட்டி இழுத்துச் சென்று காட்­டுக்குள் விட்டு திரும்­பினர்.
இம்மலைப் பாம்பின் நீளம் 15 அடியும் அதன் எடை. 40 கிலோவுமாகும்.
நன்றி - அதிரடி



 
Top