GuidePedia

(க.கிஷாந்தன்)

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா 03.04.2015 அன்று வெள்ளிக்கிழமை பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சா் ஹரீன் பொ்னாண்டோ, இராஜங்க அமைச்சா்களான இராதாகிருஷ்ணன்,கே.வேலாயுதம், மாகாண அமைச்சா்களான ரவி சமரவீர, ஆனந்த குமாரசிரி, உறுப்பினா் ருத்திரதீபன், மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இதன்போது பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த தமிழ் சாகித்திய விழா நாளை  5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் இடம்பெறவுள்ளது. ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த தமிழ் சாகித்திய விழா நடைபெருகின்றது.

முதல் தினமான நேற்று (03.04.2015) தமிழர்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஊவா மாகாணத்தின் 203 பாடசாலைகளின் மாணவ மாணவிகள் பங்கேற்று தமிழ் கலாசாரத்தை வெளிகாட்டினா். இதனை அடுத்து இன்று சனிக்கிழமை கண்டி - இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமனின் பிரசன்னமும் இடம்பெற்றது.

அதேவேளை, தமிழகத்தின் மனவள கலை மூத்த பேராசிரியர் லட்சுமணனின் பேருரை மற்றும் செயன்முறை என இடம்பெறவுள்ளன. இதுதவிர, குறிஞ்சி வேந்தன் சிறப்புரையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மூன்றாம் நாள் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கின்றார்.

இதன்போது ஆய்வரங்கம், விருது வழங்கல் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளதாக ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஏற்பாட்டுக்குழுவும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சும் அறிவித்துள்ளன.




 
Top