GuidePedia

தமிழ்நாடு அரசு மேல்நிலை பாடசாலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் மீண்டும் தங்களுக்கு வேலை தர வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மேல்நிலை பாடசாலை பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் வசந்தராஜூ இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தமிழ் நாட்டில் 652 அரசு பாடசாலைகளில் கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 14 ஆண்டுகள் வேலை செய்துள்ளனர். ஒன்பது ஆண்டுகள் தற்காலிகமாகவும் ஐந்து ஆண்டுகள் நிரந்தரமாகவும் ஊதியம் பெற்று வந்த 652 கணினி ஆசிரியர்களும் 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பி.எட் முடித்தவர்களுக்கு மட்டும் நியமனம் செய்ய பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் செய்ய தற்போதைய அதிமுக அரசு மறுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பாடசாலைக் கல்வித் துறை செயலாளர் சபிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விடாமல் தடை செய்யவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.



 
Top