ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், மாதுலுவாவே சோபித்த தேரர், அத்துரலிய ரத்ன தேரர், மகா சங்கத்தினர், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்பு மற்றும் வெகுஜன அமைப்புக்கள் என்பன ஒன்றிணையவுள்ளன.
இதன் முதல் கட்டமே கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் கடந்த புதன் கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாநாடு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.