அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனுடைய சடலம்தானா? என்பதை உறுதி செய்ய மரபணு(DNA) பரிசோதனை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன்படி தாஜுதீனின் தாயுடைய மரபணுக்கள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
வசீம் தாஜுதீனுடைய சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் இதுவரை 31சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த வழக்க்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.