GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
குமாரசிங்க சிறிசேன முன்னைய மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக பதவி வகித்திருந்தார்.அக்காலப் பகுதியில் மரக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் தொடர்பில் அவரது பெயரும் அடிபட்டிருந்தது.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தனது சகோதரர் குமாரசிங்கவை டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளராக நியமித்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் இரண்டு லட்சமாக இருந்த சம்பளத்தை அண்மையில் முப்பது லட்சம் வரை படிப்படியாக குமாரசிங்க அதிகரித்துக் கொண்டுள்ளார்.
டெலிகொம் மற்றும் அதனுடன் இணைந்த மூன்று நிறுவனங்களின் தவிசாளராக இருக்கும் குமாரசிங்க கடந்த வாரம் குறித்த நிறுவனங்களிலிருந்து தனக்கு தலா முப்பது லட்சம் சம்பளம் மற்றும் ஆறு லட்சம் வரையான கொடுப்பனவுகள் உட்பட ஒருகோடி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பணிப்பாளர் சபைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
வெறும் சாதாரண பட்டதாரியொருவர் இந்தளவு ஊதியத்தை கோரியிருப்பது பணிப்பாளர் சபையை மட்டுமல்ல, நல்லாட்சிக்காக தியாகங்களுடன் செயற்பட்ட பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



 
Top