(க.கிஷாந்தன்)
எதிர் வரும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக 19.10.2015 அன்று கொட்டகலையிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக இளைஞர் யுவதிகள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகஸ்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உத்தியோகஸ்தர்களும், ஆதரவாளர்களையும் பிரதேச வாரியாக கமிட்டி அமைத்து நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுச் செயலாளர் உள்ளிட்ட இ.தொ.காவின் தலைவர் முத்துசிவலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.கா வின் உப தலைவர்கள், அரசியற் பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.