GuidePedia

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை நகரில் பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியிலிருந்து 7 தோட்டப்பிரிவுகளுக்கு செல்லும் பிரதான வீதி 19.10.2015 அன்று இரவு பெய்த அடைமழையால் சரிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வட்டகொடை பிரதான தபாலகம் அமைகப்பட்டுள்ள இடத்திற்கு மேற்புரமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட இந்த பிரதான வீதி ஊடாக வட்டகொடை அரசாங்க வைத்தியசாலை மற்றும் தபாலகங்களுக்கு மற்றும் வட்டகொடை தோட்டப்பிரிவுக்கு சேர்ந்த 7 பிரிவுகளுக்கு செல்லும் பிரதான வீதி என்பது குறிப்பிடதக்கது. வீதியின் ஆரம்ப பகுதியில் பாரிய வெடிப்பு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக 20.10.2015 அன்று காலை 9 மணிமுதல் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம் வணிகதுங்க தலைமையில் பொலிஸ் குழுவினரும், பிரதேச வாசிகளும் மற்றம் கிராம சேவகர் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அப்பகுதிக்கு சென்று தேங்கி நிற்கும் நீரை விலக்க  சிரமதான பணி ஒன்றினை மேற்கொண்டனர்.



 
Top