GuidePedia

(எப்.முபாரக்)               
ஜனாதிபதியின் நல்லாட்சியில் இந்நாட்டு மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழல் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுப்போம், அனைத்து மாவட்டங்களிலும் கல்வி,சுகாதாரம்,மற்றும் போக்குவரத்து போன்ற போன்ற அனைத்து முக்கிய துறைகளும் சிறப்புர அமையும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காணி அமைச்சருமான எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.                                       கந்தளாய் அக்போபுர பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.                   அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:கடந்த காலங்களில் மக்களின் வாழ்க்கை சுமையையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்தார்கள் இன்று அவ்வாரான துன்பங்கள் இன்றி மக்கள் நிம்மதியாக நல்லாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.குருகிய காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் வேளையில்லாப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்.பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும் மற்றும் எதிர் வருகின்ற செவ்வாய் கிழமை (20)நில அளவைத்திணைக்களத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த 450 பேருக்கு எனது அமைச்சினுடாக தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளேன் என்றார்.               இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேன,மற்றும் கந்தளாய் முன்னால் பிரதேச சபையின் உறுப்பினர்கள்,உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 



 
Top