(எஸ்.அஷ்ரப்கான்)
உளஹிட்டிவல அல்-மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்புரி அமைப்பினர்கள் இன்று (19) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்த்தனவை அவரது அமைச்சில் சென்று சந்தித்தனர்.
பியகம பிரதேச சபையின் உறுப்பினர் முஹம்மது இர்பான் அவர்களின் முயற்சியினால் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பாடசாலையின் பல்வேறு குறைபாடுகள், அபிவிருத்தி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதுடன், விரைவில் அவற்றினை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலைக்கு நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரிடம் தெரிவித்தார்.