GuidePedia

(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ரொக்வூட் தோட்டப்பகுதியில் 17.10.2015 அன்று இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பகுதியில் 17.10.2015 அன்று பெய்த மழை காரணமாக குறித்த ரொக்வூட் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் வீடுகளுக்கு மேற்பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இந்த தோட்டத்திற்கு செல்லும் பாதையும் மண்சரிவில் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் கீழ் பகுதியில் 20 வீடுகள் கொண்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் இருப்பதனால் அப்பகுதிக்கு மண்சரிவு வரகூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு முறை மண்சரிவு ஏற்பட்டதாகவும் கற்பாறைகள் காணப்படுகின்ற இடங்களிலேயே இந்த தோட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மலையக பிரதேசங்களில் மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



 
Top