GuidePedia


(சுஹைல்)
வடக்கு மானாணத்திலிருந்து விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை  (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை கிண்ணியா, அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகிய இணைந்து வெ ளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரியவிக்கப்பட்டுள்ளதாவது, 
வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப்புலிகளினால் இனச் சுத்தீகரிப்பின் பேரில் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு  25 வருடங்கள் ஆகின்றன. கால் நூற்றாண்டு காலமாக சொல்லெனா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதி எனும் அவல வாழ்வை அனுபவிக்கின்றனர். 
யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என செய்வதறியாது இருந்த மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமது சொந்த இடத்திற்கு செல்லும் நாட்கள் அருகில் இருக்கின்றது என்கிற நம்பிக்கை பிறந்தது. பல கரும் நிகழ்வுகளை ஏற்படுத்திய யுத்தம் நிறைவுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்களின் கணவுகள் இன்னும் நனவாகவில்லை. 
இந்நிலையில் அம்மகளின் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்குரிய பொறுப்புகளை சரிவர நிறைவேற்றததன் காரணமாக  அனைத்து விடயங்களும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய அரசியல் சூழ்நிலை வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனயீர்ப்பை பெறுவதற்காக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு (MRO), தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு மற்றும் நாடு முழுவதிலுமுள்ள சமூக நல நோக்கம் கொண்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாடுதழுவிய கவனயீர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெ ள்ளிக்கிழமை (23.10.2015) அன்றைய தினம் நடத்த தீர்மாணித்துள்ளது. 
இவ்வார்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியிலும் மிகவும் ஒழுக்கமான முறையில் முஸ்லிம் சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவன்னம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறோம். 
அனைவரும் அணி திரண்டு வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போம். இது இன்றை காலத்தின் முக்கிய தேவையாக இருக்கின்றது. சமூக நலத்தில் அக்கறைகொண்டவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
பிரதான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டாம் 23.10.2015 கொழும்பு 10 மருதானை ஸாஹிரா கல்லூரிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, கல்முனை  உள்ளிட்ட பல பகுதிகளிலும் கிண்ணியாவிலும் ஆர்ப்பாட்டங்களை பல அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ங்களுக்கு அனைவரும் அணிதிரண்டு வாருங்கள். நம் சமூகத்தின் விடிவுக்காய் குரல் எழுப்புங்கள். அத்துடன் எமது அழைப்பை ஏற்று நாட்டின் பல பாகங்களிலும் ஆர்பாட்டங்ள் முன்னெடுக்கப்படவுள்ளன

நமது நல்லென்னங்களை அல்லாஹ் அங்கீகரிப்பானாக!



 
Top