GuidePedia

(க.கிஷாந்தன்)

இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  கொட்டகலை யூலிப்பீல்ட் பகுதியில் 17 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 18.10.2015 அன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் அவரினால் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக கொட்டகலை யூலிப்பீல்ட் வெலிங்டன் பிரிவில் 17 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு வெள்ளையன் புரம் என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரத்துடன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 18.10.2015 அன்று கையளித்தார்.

இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி  பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



 
Top