(எஸ்.அஷ்ரப்கா ன்)
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மல்வானை உளஹிட்டிவல அல்-மஹ்மூத் வித்தியாலய மாணவர்கள் 16 பேர் சித்தியடைந்து புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் தெரிவித்தார்.
களனி கல்வி வலயத்தில் சிங்கள, தமிழ் மொழி மூலம் உள்ள 115 பாடசாலைகளுக்கிடையில் முதலாமிடத்தை பெற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளது.
அப்துர் ரஹீம்-174, அப்துல் அஸீஸ்-174, பாத்திமா சுஹூறா-174, எம்.எச். ஹஸ்ரின் அஹமட்-170, நபீல் அஹமட்-169, ஸஹ்மி ஹசன்-169, நபீஸ் அஹமட்-166, பாத்திமா ஹாஜறா-162, பாத்திமா இல்மா-162, பாத்திமா றமாஸா-161, முஹம்மது நாஸிப்-161, முஹம்மது அதீப்-160, முஹம்மது ஹம்றான்-158, முஹம்மது இமாஸ்-157, பாத்திமா நுஹா-156, பாத்திமா றிஸ்மியா-156 ஆகிய 16 மாணவர்களே இம்முறை சித்தியடைந்தவர்களாகும்.
மேலும் அதிகப்படியான மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் இருந்து இப்பாடசாலையில் தொடர்ந்தும் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகப்படியான மாணவர்கள் சித்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாடசாலைக்கு அதிபராக தற்போதைய அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் பொறுப்பெடுத்ததைத் தொடர்ந்து இப்பாடசாலையின் கல்வி நிலை மிகவும் உயர்ந்து கொண்டு செல்வதாகவும், புலமைப்பரிசில் பரீட்சை மட்டுமல்லாது 2015 ஆண்டு க.பொ.த. சா.தர பரீட்சைக்கும் இப்பாடசாலையில் முதல் தடவையாக 30 திறமையான மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும், அதிபரின் அயராத முயற்சியாலேயே இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிகண்டு வருவதாகவும் பாடசாலை அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைப்பினர் சுட்டிக் காட்டுவதுடன் அதிபரது அயராத முயற்சிக்கு தமது பாராட்டுக்களையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.