நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியதோடு, தாயின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.