(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தலாங்கந்தை தோட்டத்தில் 18ம் திகதி இரவு 10 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன.
எனினும் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. இதனால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கடும் மழை பெய்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குடியிருப்புகள் அமைந்துள்ள பின் பகுதியில் அதி உயரமான மண்மேடு காணப்படுவதால் தொடர்ச்சியாக சரிந்து விழ கூடிய அபாயநிலை தோன்றியுள்ளது.
இவ்வணர்த்தம் இடம்பெற்றபோது வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் முன் அறையில் இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உயிராபத்துக்கள் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை தோட்டத்தில் உள்ள கோயில் மண்டபத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.