GuidePedia

(ஜிப்ரி- கிண்ணியா)
மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி 2014 ம் ஆண்டு காலப்பகுதியில் சவுதி அரேபியா அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதிக்குழுவிடம் மகாவலி நீரினை திசை திருப்புவதற்கான முன்மொழியினை முன்னால் பிரதியமைச்சர் "எம்.எஸ்.தௌபீக்" அவர்கள் கையளித்தார்
அவரின் விடா முயற்ச்சியின் பலனாக "சவுதி அரேபியாவின்" அபிவிருத்தி நிதியத்தின் உயர் அதிகாரி அப்துல்லாஹ் இஸட்டோகி மற்றும் பொறியியலாளர் பெந்தர்  2015-10-20 ம் திகதி அன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து மகாவலி நீரினை திசை திருப்பல்  சம்மந்தமாக கலந்துரையாடி அத்திட்டத்திட்டத்திற்கான சாதகமான ஒரு பதிலை கூறியிருக்கின்றார்கள்
இத்திட்டத்தின் மூலமாக கிண்ணியா,மணியரசன் குளம்,வான்எல.கந்தளாய் போன்ற பிரதேசங்களில் வாழும் விவசாயிகளின் சுமார் 8000 ஏக்கர் மானவரி காணிகள் இரு போக நீர்பாச்சல் காணிகளாக மாறி அவர்களின் பொருளாதாரத்தில் மாபெரும் வளர்ச்சியை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த சுமார் 6500 தொடர்க்கம் 7000 மில்லியன் ரூபாய் தேவையன்று அதற்கான பொறியியலாளர் கூறியிருக்கின்றார் என்பது கூறிப்பிடதக்கது 
இன் விஜயத்தின் போது பொறியியலாளர் அனோமா மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் டெக்டர் கே. வெலிஹபொலஹே கலந்து சிறப்பித்தார்

மிக விரைவில் இத்திட்டத்திற்கான அனுமதியை சவுதி அரேபியா அரசாங்கம் அபிவிருத்தி நிதியம் அதற்கான நிதியினை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளது.



 
Top