(சப்னி )
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஷால் காசீம் இன்று நிந்தவூர் ஆதாரத வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மஹிப்பால அவர்களுடன் குழுவொன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இங்கு விஜயம் மேற்கொண்ட குழு வைத்தியசாலையின் குறைகள், தேவைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் அத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
அத்துடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மஹிப்பால அவர்களுக்கு நிந்தவூர் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினால் ஞாபகரத்த சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது'