GuidePedia

நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் 10 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு 7 மணிக்கு வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யடியந்தோட்டைப் பிரதேசத்தில் நேற்றும் இன்று அதிகாலையும் பல இடங்களில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி பிரதேசத்தில் பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் இன்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் கடல் பிரதேசங்களில் இன்றும் கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.



 
Top