(எப்.முபாரக்)
சேருநுவர கந்தளாய் பிரதான வீதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலையில் அல்லைப்பாலத்துக்கருகில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகனம் ஒன்றைச் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வேகமாக சென்ற வேனுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும், விபத்தில் காயங்களுக்குள்ளானவர் கந்தளாவைச் சேர்ந்த சமன் விஜயசிறி வயது (42) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேனின் சாரதியை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் சூரிய புர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.