மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 66 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில், ஸ்ரீவர்த்தன 11 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஒட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களையும் ஹேரத் 40 பந்துகளை எதிர்கொண்டு 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் தவிர சந்திமால் 25, குசல் பெரேரா 16, மெத்தியூஸ் 14 கருணாரத்ன மற்றும் மெண்டிஸ் தலா 13 ஒட்டங்களையும் பெற்றனர். இவர்கள் தவிர அணியின் ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.